பவானி பழைய பேருந்து நிலையத்தில் புதிய நிழற்குடை திறப்பு

பவானி பழைய பேருந்து நிலையத்தில் புதிய நிழற்குடை திறப்பு
X

பவானி பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடையை சுப்பராயன் எம்பி திறந்து வைத்தார்.

Erode news- ஈரோடு மாவட்டம் பவானி பழைய பேருந்து நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

Erode news, Erode news today- பவானி பழைய பேருந்து நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி பழைய பேருந்து நிலையத்தில் புதிய நிழற்குடை அமைக்க சுப்பராயன் எம்.பி., தனது நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியின் மூலம் புதிய கான்கிரீட் நிழற்குடை, சாய்வுடன் கூடிய இருக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) இன்று நடைபெற்றது.

விழாவிற்கு, பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை வகித்தார். துணை தலைவர் மணி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் சுப்பராயன் எம்.பி. கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை ரிப்பன் வெட்டி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இவ்விழாவில், 22வது வார்டு கவுன்சிலர் சரவணன் கல்வெட்டு திறந்து வைத்தார். சிபிஐ வடக்கு மாவட்ட செயலாளர் மோகன்குமார், மாநிலக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், திமுக நகர செயலாளர் நாகராஜன், சிபிஐ நகர செயலாளர் பாலமுருகன், 8வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business