சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் பழங்குடியின மக்களுக்கான மளிகை கடை திறப்பு
பழங்குடியின மக்களுக்கான மளிகை கடையினை ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் சுதாகர் திறந்து வைத்த போது எடுத்த படம்.
சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் பழங்குடியின மக்களுக்கான மளிகை கடையினை ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் சுதாகர் திறந்து வைத்தார்.
ரீடு சேவை நிறுவனம் கடந்த 23 ஆண்டுகளாக சமூக விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கல்வி, பொருளாதார மற்றும் சுகாதாரம் போன்ற முன்னேற்ற பணிகளை செய்து வருகிறது.
ரீடு சேவை நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் எப்எப்விடிபி திட்டத்தில், ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்திற்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் 9 பழங்குடி கிராமங்களில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சுகாதாரப் பணிகளை ரீடு நிறுவனம் செய்து வருகிறது.
உணவு பொருட்கள் வாங்க இட்டரை கிராம பழங்குடி மக்கள் சத்தியமங்கலம் 30 கி.மீ., அல்லது தாளவாடி 20 கி.மீ., தான் செல்ல வேண்டும். இதனை தீர்க்கும் விதமாக இட்டரை கிராமத்தில் பழங்குடி மக்களுக்களுக்கான மளிகை கடை திறப்பு விழா ரீடு நிறுவன இயக்குனர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது.
ஆசனூர் வனகோட்ட துணை இயக்குனர் சுதாகர் மளிகை கடையை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் தலமலை வனச்சரகர் சுகுந்தன், மற்றும் கிராம வளர்ச்சி குழுதலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
ரீடு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். ரீடு திட்ட அலுவலர் சரவணக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரீடு திட்ட அலுவலர்கள் சிவராஜ், ரம்யா, கிருத்திகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu