ஆப்பக்கூடல் அருகே ரூ.15 ஆயிரம் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை

ஆப்பக்கூடல் அருகே ரூ.15 ஆயிரம் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை
X
Erode News- தமிழ்செல்வன்.
Erode News- ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருடிய இளைஞருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து பவானி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Erode News, Erode News Today- ஆப்பக்கூடல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருடிய இளைஞருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து பவானி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரிச்சேரி இந்திராநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் தமிழ்செல்வன் (வயது 20) என்பவர் பிரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை திருடினார்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வீடு புகுந்து திருடிய தமிழ்செல்வனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.

இதைத்தொடர்ந்து, கோவையில் உள்ள மத்திய சிறையில் தமிழ்செல்வன் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story