திமுக அரசின் ஓராண்டு நிறைவு: அந்தியூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக அரசின் ஓராண்டு நிறைவு: அந்தியூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

அந்தியூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடிய போது எடுத்த படம்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் அந்தியூரில் இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

தற்போதைய தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று நேற்றோடு ஒரு ஆண்டு முடிவடைந்தது.

இந்நிலையில் ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சியை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுகவினர் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் திமுக சார்பில் அந்தியூர் ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் முருகேசன் தலைமையில், சிங்கார வீதி தேர்வீதி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில், நகர ஒன்றிய திமுகவினர் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!