பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேரில் ஒருவர் கைது

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேரில் ஒருவர் கைது
X

சித்தோடு காவல் நிலையம் (பைல் படம்)

பவானி சேர்ந்த நகை வியாபாரியின் இருசக்கர வாகனத்தை திருடிய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரில் ஒருவர் கைது.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் தனபால்.நகை வியாபாரி. கடந்த 7ம் தேதி திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் வரை சொந்த வேலை காரணமாக சென்றுள்ளார். பின்னர், வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் பெருந்துறை அருகே உள்ள செல்லப்பம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மயங்க நிலையில், சாலையின் ஓரத்தில் இருந்த போது, அங்கு வந்த மூன்று வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து, தனபால் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன், வேலு , வினோத் ஆகியோர் இருசக்கர வாகனத்தை திருடிய தெரியவந்தது. இதன் பின்னர், போலீசார் பிரபாகரன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை மீட்டனர். மேலும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வேலு , வினோத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் சித்தோடு போலீசார் 80கி.மீ தொலைவில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture