அந்தியூர் அருகே யானை தந்தம் கடத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

அந்தியூர் அருகே யானை தந்தம் கடத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது
X

Erode news- பெண் கைது (பைல் படம்).

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே யானை தந்தம் கடத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

Erode news, Erode news today- அந்தியூர் அருகே யானை தந்தம் கடத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோவில் அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 4 யானை தந்தங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்தியூர் வனப்பகுதியில் தந்தம் கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்றதாக காரில் இருந்த நாமக்கல்லைச் சேர்ந்த ஆர்.குணசேகரன் (வயது 35), கடலூரைச் சேர்ந்த சாந்தப்பா (வயது 50), சேலத்தைச் சேர்ந்த கே.சின்னக்கண்ணன் (வயது 45), கோவையை சேர்ந்த ஜி.செந்தில்குமார் (வயது 43) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர்கள் கொடுத்த தகவலின்படி கோவை மாவட்டம் சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணி (வயது 44) என்பவரும் யானை தந்தம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரையும் வனத் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேர் தந்தம் விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக வனத்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!