ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம்

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கருத்தரங்கில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இன்டெகிராட்டிங் எஸ்டிஜிஸ் ஈண்டு பிஸ்னஸ் சடஜி போர் சஸ்டீன்அபிலிட்டி தலைப்பில் ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இன்டெகிராட்டிங் எஸ்டிஜிஸ் ஈண்டு பிஸ்னஸ் சடஜி போர் சஸ்டீன்அபிலிட்டி தலைப்பில் ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறை மற்றும் சென்னை பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (பெட்ரிசியன்) நிறுமச் செயலியல் மற்றும் கணக்கியல் & நிதித் துறையுடன் சேர்ந்து இன்டெகிராட்டிங் எஸ்டிஜிஸ் ஈண்டு பிஸ்னஸ் சடஜி போர் சஸ்டீன்அபிலிட்டி என்னும் தலைப்பின் கீழ் ஒரு நாள் சர்வதேச மெய்நிகர் கருத்தரங்கை நடத்தியது.

இந்த கருத்தரங்கு துவக்க விழாவில் கொங்கு கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், பெட்ரிசியன் கல்லூரியின் இயக்குநரும் செயலாளருமான நவீன் ஆகியோர் கருத்தரங்கை வாழ்த்திப் பேசினர். கொங்கு கல்லூரியின் முதல்வர் வாசுதேவன், பெட்ரிசியன் கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியமேரி கீதா ரூஃபஸ் ஆகியோர் முக்கிய குறிப்புரை ஆற்றினர்.


முதலாவதாக Business in the Age of Sustainability: How Responsible Consumption and Climate Action are Shaping the Future என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சங்கீதா உரையாற்றினார். அவர் நிகழ்காலத்தின் உறுதியான வணிகம், பொறுப்பான நுகர்வோர் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை எவ்வாறு நம்பிக்கையான எதிர்காலத்தின் உருவாக்கத்தில் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி பேசினார்.

இரண்டாவதாக "Gender Equality and Women's Empowerment: Role of Third Sector Economy" தலைப்பில் எத்தியோப்பியாவின் ஹவாசா பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் பொருளாதாரக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் கருணாகரன் உரையாற்றினார். சமுதாயத்தில் பாலின சமத்துவத்தை கடைப்பிடிப்பதன் தாக்கம் எவ்வாறு உலகின் நிலையான வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்பது பற்றி அவர் பேசினார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் பல்வேறு துறைகளில் அவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவது ஒரு நாட்டின் மூன்றாம் துறை பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்த முடியும் என்பதைப் பற்றியும் அவர் பேசினார்.


மூன்றாவதாக Growth, Evolution and Strategies of Sustainable Development Goals: An Overview" தலைப்பில் ஓமன் சுல்தானகத்தின் மசூன் கல்லூரியின் உதவிப் பேராசிரியை வரலட்சுமி உரையாற்றினார். நவீன யுகத்திற்கு ஏற்ப நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு பயன்படுத்தப்படும் யுத்திகளை எவ்வாறு கையாளுவது என்பதைப் பற்றி அவர் பேசினார்.

நான்காவதாக Business Research and Sustainability Development" என்ற தலைப்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் உதவிப் பேராசிரியர் தனலட்சுமி கையாண்டார். வணிகத் துறையில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதன் இன்றி அமையாத தன்மையைப் பற்றி அவர் பேசினார்.

கருத்தரங்கின் இறுதியில் தமிழ்நாடு அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மறுசீரமைக்கப்பட்ட உயர்நிலை நிபுணர் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் உரையாற்றினார். இளம் மனங்களின் மனப்பூர்வமான பங்களிப்பு எவ்வாறு ஒரு நிலையான இந்தியாவை உருவாக்குவதிலும் உலகின் நிலைத்தன்மைக்கும் மகத்தான பங்கை வகிக்கிறது என்பது பற்றி அவர் பேசினார்.


ருத்தரங்கு நடவடிக்கைகள் குறித்த புத்தகம் இரு நிறுவனங்களின் முக்கியஸ்தர்களால் வெளியிடப்பட்டது. கொங்கு கல்லூரியின் நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறைத்தலைவர் அழகுஅப்பன் கருத்தரங்கு அறிக்கையை வாசித்தார். இந்தியாவிலும், அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் சுமார் 75 ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் பங்கேற்று தங்கள் கட்டுரைகளை E-ISSN மற்றும் E-ISBN இதழ்களில் வெளியிட்டனர். 50க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

இக்கருத்தரங்கை சாந்தாமணி, வித்யா மற்றும் சவிதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பெட்ரிசியன் கல்லூரியின் கணக்கியல் மற்றும் நிதித் துறைத் தலைவர் மீனாட்சி, கொங்கு கல்லூரியின் நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறை உதவிப் பேராசிரியர் கௌதமி ஆகியோர் நன்றியுரை வழங்கினர். பெட்ரிசியன் கல்லூரியின் இணைப் பேராசிரியர் ஸ்ரீப்ரியா, பெட்ரிசியன் மற்றும் கொங்கு கல்லூரியின் பேராசிரியர்கள் இணைந்து இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். கொங்கு, பெட்ரிசியன் மற்றும் பிற கல்லூரிகளில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story