ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த ஓணப் பூக்கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (13ம் தேதி) கொண்டாடப்பட்டது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் இந்தி மற்றும் பிற மொழிகள் துறை மற்றும் நுண்கலை மன்றம் சார்பாக, மாணவ, மாணவிகளிடையே கலாச்சார, பிராந்திய மற்றும் மொழி வேறுபாடுகளில் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் ஓணம் பண்டிகை இன்று (13ம் தேதி) கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, மாணவ-மாணவியர்களுக்கு ஓணப் பூக்கோலப் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து இறை வழிபாட்டுடன், கேரளாவின் தனித்துவ நடன வடிவமான திருவாதிரக்களியை மாணவியர் ஆடினர். நிறைவாக, கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் பூக்கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டிப் பரிசுகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஹெச்.வாசுதேவன் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இவ்விழா ஏற்பாடுகளை, இந்தி மற்றும் பிற மொழிகள் துறை இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் வி.அன்புமணி மற்றும் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.கோகிலா ஆகியோர் செய்திருந்தனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கொண்டாட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu