ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
திண்டல் வேளாளர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.
ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரியில் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலத்தை ஆட்சி செய்த மகாபலி மன்னனின் வருகைக்காக "அத்தப்பூ' கோலமிட்டு வரவேற்கும் பண்டிகையாக கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை வெகு விமர்சையாக மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், ஓணம் பண்டிகை நாளை (ஆக.,29) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரியில் அனைத்து மத பண்டிகைகள், தேசிய விழாக்கள் கொண்டாடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக கல்லூரியில் ஓணம் விழா நடந்தது. வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் நுண்கலை மன்றத்தின் சார்பாக ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.ஜெயக்குமார், செயலர் செ.து.சந்திரசேகர், முதல்வர் டாக்டர் செ.கு.ஜெயந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாணவிகள் கல்லூரி வளாகத்தில் "அத்தப்பூ' கோலமிட்டிருந்தனர். தொடர்ந்து, கேரளா பாரம்பரிய இசையுடன் வாமனர், மகாபலி மன்னருடன் மாணவிகள் ஊர்வலம் நடைபெற்றது. மேலும், வண்ண மயமான நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சியை மாணவிகள் கண்டு களித்து மகிழ்ந்து கொண்டாடினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu