பக்ரீத் பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் 150 பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் 150 பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை

ஈரோடு பெரியார் நகரில் பக்ரீத் சிறப்பு கூட்டு தொழுகை நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகையை யொட்டி, ஈரோடு மாவட்டத்தில் இன்று 150 பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் இன்று 150 பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகையை (இன்று) திங்கட்கிழமை இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் இன்று காலை ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

அதேபோல ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பள்ளிவாசல், ரயில்வே காலனி பள்ளிவாசல், வளையக்கார வீதி பள்ளி வாசல், கருங்கல்பாளையம் பள்ளிவாசல் , ஓடைப்பள்ளம், கருங்கல்பாளையம், எல்லப்பாளையம், கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், வெண்டிபாளையம், நஞ்சப்பா நகர், பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார் தோட்டம், விவிசிஆர், திண்டல், ஆர்.என். புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. தொழுகை முடிந்ததும், ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல, மாவட்டத்தில் கோபி, சத்தி, பவானி, பவானிசாகர், பெருந்துறை, நம்பியூர், புளியம்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றதோடு, ஈகை திருநாளை கொண்டாடும் வகையில் ஏழைகளுக்கு குர்பானி இறைச்சி வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story