/* */

நாடாளுமன்றத் தேர்தல்: அந்தியூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

HIGHLIGHTS

நாடாளுமன்றத் தேர்தல்: அந்தியூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்
X

அந்தியூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலத்தில் எடுத்த படம்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அந்தியூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 19ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்புடன் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி காவல்துறை சார்பில் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்கள் சார்பில் அந்தியூர் சரக காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் அந்தியூரில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் அந்தியூர் சரக காவல் நிலையங்களான அந்தியூர் வெள்ளித்திருப்பூர், அம்மாபேட்டை மற்றும் பர்கூர் உள்ளிட்ட காவல் நிலையங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உள்ளூர் போலீசார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட குஜராத் பெட்டாலியன் போலீசார் இணைந்து பொதுமக்கள் மத்தியில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வெப்பத்திலிருந்து விடுதலை தரும் இதமான குளிர், கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பசுமை, மனதை இலேசாக்கும் மெல்லிய காற்று, இவையெல்லாம் குன்னூரின் தனிச்சிறப்புகள். இயற்கையின் இனிமையில் ஒருநாள் கரைந்துபோவதற்கு குன்னூர் உகந்த இடம்!

நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தை அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் முரளி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலமானது, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானாவில் தொடங்கி தவிட்டுப்பாளையம் வழியாக மூப்பனார் சிலை வரை சென்று மீண்டும் தேர் வீதி வழியாக பர்கூர் சாலையில் கிழக்கு பள்ளி வழியாக வந்து மீண்டும் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானாவில் நிறைவுற்றது.

Updated On: 8 April 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
  2. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
  5. இந்தியா
    மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
  8. உலகம்
    வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
  9. விளையாட்டு
    கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
  10. வணிகம்
    நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!