/* */

ஈரோடு சோழீஸ்வரர் ஆலயத்தில் 26ம் தேதி அதிருத்ர மகாயாகம் துவக்கம்

Erode news - ஈரோடு காவிரி கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயிலில் அதிருத்ர மகா யாகப் பெருவிழா 26ம் தேதி துவங்கி மே 1ம் தேதி வரையிலும் நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு சோழீஸ்வரர் ஆலயத்தில் 26ம் தேதி அதிருத்ர மகாயாகம் துவக்கம்
X

Erode news- அதிருத்ர மகா யாகப் பெருவிழா. (கோப்பு படம்)

Erode news, Erode news today- ஈரோடு காவிரி கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயிலில் அதிருத்ர மகா யாகப் பெருவிழா 26ம் தேதி துவங்கி மே 1ம் தேதி வரையிலும் நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காவிரி கரையின் காசி என்று அழைக்கப்படும் ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயில், வாரணாசி எனப்படும் காசி மற்றும் நேபாளத்தில் அமைந்துள்ள பசுபதிநாத் திருக்கோயில்களுக்கு இணையானதாக கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகும்.

அதிருத்ர மகா யாகம்

மக்கள் குறை இல்லாத செல்வம் பெறவும், மழை வளம் பெருகி, வேளாண்மை செழித்திடவும், நாடு சுபிக்ஷம் பெறவும், காவிரியில் குறையாமல் தண்ணீர் பெருகி ஓட வேண்டியும் முந்தைய அரசர் காலங்களில் நடத்தப்பட்ட அதிருத்ர மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவில் குருக்களான குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் அருண்குமார் சிவம் குருக்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட வேத ஆகம விற்பன்னர்கள் பங்கேற்க உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து குருமூர்த்தி சிவாச்சாரியார், அருண்குமார் சிவம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிருத்ர யாகம் என்பது சிவபெருமானின் தத்துவங்கள் அவரது குணாதிசயங்கள் பற்றிய பெருமையை பேசுவதும், ருத்ரனின் சமக்கம் மற்றும் அங்கங்களின் பெருமையையும் விளக்கி இந்த யாகத்தில் மந்திரங்கள் ஜெபிக்கப்படும். இதன் மூலம் சிவபெருமானின் அனுகிரகம் பெற்று நாட்டில் செல்வம் பெருகவும், மழை வளம் மற்றும் நீர் வளம் பெருகவும் காவேரி ஆற்றில் வற்றாமல் நீர் பெரிய ஓடவும், இதன் மூலம் வேளாண்மை செழித்திடவும், நிலவளம் மேம்படவும், நாடு சுபிட்சம் அடையவும் வேண்டும் என்பதற்காக இந்த அதிருத்ர மகா யாகம் நடத்தப்படுகிறது.

11 நாட்களுக்கு ஹோமம்

இந்த யாகத்தின் போது 14,641 முறை ஸ்ரீ ருத்ர சிவ மந்திரங்கள் ஜெபிக்கப்படும். மொத்தம் 11 நாட்களுக்கு 1,331 முறை ஸ்ரீ ருத்ர ஹோமம் நடைபெறும். பூர்வாங்க ஹோமம், கணபதி ஹோமம், சுப்பிரமணியர் ஆமாம் நவகிரக ஹோமம் சுதர்சன ஹோமங்கள் நடைபெறும். முக்கியமான அதிருத்ர மகாயாகம் வரும் வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெறும். இந்த யாகத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட வேதாகம விற்பனர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஈரோடு மாநகரைப் பொருத்தவரையிலும் முதன்முறையாக இந்த மகா ருத்ர யாகம் நடைபெறுகிறது. காசி சோழீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் யாகங்களுக்கு ஒப்பானதாக இந்த யாகம் இருக்கும். 21ம் தேதி காலை மகா கணபதி பூஜை இடம் தொடங்கிய இந்த யாக விழா வரும் மே 1ம் தேதி 11ம் கால மகா யாகத்துடன் நிறைவு பெறும். மே 1ம் தேதி யாகம் நிறைவடைந்த பிறகு ருத்ர ஜெபம் செய்யப்பட்டு மகாபூர்ணா ஹுதியுடன் யாத்ராதானமும் செய்து கலசங்களை எடுத்துச் சென்று ஸ்ரீ சோழீஸ்வர பெருமானுக்கு அதிருத்ர மகாயாக கலசா அபிஷேகம் செய்யப்பட்டு, விசேஷ அலங்காரத்துடன் சோழீஸ்வர பெருமான் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தருவார் என்று தெரிவித்தனர்.

யாகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை விழா குழுவின் சுந்தர்ராஜன், ஹரிபாபு, சோமு, தனபால், தேவராஜ், மணி உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Updated On: 21 April 2024 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்