ஈரோடு: காரில் கட்சிக் கொடி; அனுமதி அவசியம் - அதிகாரிகள் அறிவுறுத்தல்

Erode news- காரில் இருந்த அரசியல் கட்சி கொடி கட்டுவதற்கு அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என தேர்தல் செலவினப் பார்வையாளர் அறிவுறுத்தினார்.
Erode news, Erode news today- ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது உதவியாளர் பயணித்த காரில் இருந்த அரசியல் கட்சி கொடியை தேர்தல் செலவின பார்வையாளர் அகற்ற அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நிலையான தேர்தல் அலுவலர்களின் வாகன சோதனை, பறக்கும் படை வாகன சோதனை, தேர்தல் நடத்தும் செலவினப் பார்வையாளர்களின் கண்காணிப்பு என பல்வேறு கட்ட பணிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில, இன்று ஈரோடு காளைமாடு சிலை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் செலவினப் பார்வையாளர் பாஸ்கர், தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது உதவியாளரின் கார்கள் வந்து கொண்டிருந்தது.
இரண்டு கார்களையும் சோதனை செய்த செலவினப் பார்வையாளர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், இரண்டு வாகனங்களுக்கு அரசியல் கட்சி கொடி கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என ஆற்றல் அசோக்குமாரின் உதவியாளரிடம் கேட்டனர். அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறினார். இருந்தபோதிலும் உரிய அனுமதியை பெற்றதற்கான சான்றிதழை அலுவலகத்திற்கு கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அவ்வாறு அனுமதி பெறவில்லை எனில் உடனடியாக கொடியை அகற்றிவிட வேண்டும் எனவும் தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu