ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.20) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ERODE DISTRICT POWER SHUTDOWN

Erode Today News, Erode News - ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.20) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (20ம் தேதி) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் க.நாச்சிமுத்து தெரிவித்துள்ளார். எனவே, மின்சார தேவை ஏதேனும் இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எழுமாத்தூர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!