ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.17) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.17) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.17) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.17) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவம்பர் 17) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னிமலை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!