ஈரோடு மாவட்டத்தில் நாளை (11ம் தேதி) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (11ம் தேதி) மின்தடை பகுதிகள் அறிவிப்பு
X

Erode news- நாளை மின்சார நிறுத்தம் (பைல் படம்)

Erode news- ஈரோடு மாவட்டத்தில் நாளை (11ம் தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நாளை (11ம் தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி, ஈரோடு மேட்டுக்கடை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (11ம் தேதி) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம், நாகப்பாளையம், வள்ளியம்பாளையம் நீரேற்று நிலையம், கொளாநல்லி நீரேற்று நிலையம், வெள்ளோட்டம்பரப்பு நீரேற்று நிலையம், கொம்பனைபுதூர் நீரேற்று நிலையம், சத்திரப்பட்டி, சத்திரம், கருவேலம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.

மேட்டுக்கடை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், தங்கம்நகர், அத்தப்பம்பாளையம், செந்தூர்கார்டன், வித்யாநகர், மேல்திண்டல், ஐத்ரேயாகாலனி, திண்டல், கீழ் திண்டல், பெருந்துறைரோடு, சக்திநகர், சிவன்நகர், சாமுண்டிநகர், அரவிந்தன்நகர், ஸ்ரீநகர், செல்வம்நகர், யாழ்நகர், யு.ஆர்.சி.நகர் மற்றும் ஓடைமேடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business