ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே 20) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே 20) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கஸ்பாபேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால், இந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி , கஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (மே 20) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்குமூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாய்க்கன்பாளையம்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டக்கோத்தாம்பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அந்தியூரில் திட்டப்பணிகளை காணொலியில் திறந்த முதல்வர்..!