ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூலை.,07) வெள்ளிக்கிழமை மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி, கொடுமுடி, சிவகிரி, நடுப்பாளையம், கணபதிபாளையம் துணை மின்நிலையங்கள் மற்றும் எழுமாத்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மொடக்குறிச்சி மின்பாதையில் நாளை (ஜூலை 7) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோபி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கோபி பேருந்து நிலைய பகுதி, மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்ச கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம், கொறவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சை கோபி.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாய்க்கன்பாளையம்.

சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளை யம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட் டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில் பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக் கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர்,காட்டுப்பாளையம், ராக்கம்மாபுதூர், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்குபுதுப்பாளையம்.

நடுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர்,பி.கே.மங்களம், கொளாநல்லி, கருமாண்டாம்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, பி.கே.பாளையம், சோளங்காபாளையம், எம்.கே.புதூர், ஆராம்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்பாளையம், குட்டப்பாளையம்.

கணபதிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்டன்பாளையம், சோளங்காபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கணபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம்பாளையம், சாணார்பாளையம், குமரன்பாளையம்.

எழுமாத்தூர் துணை மின் நிலையம் - மொடக்குறிச்சி மின்பாதை (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பூந்துறைசேமூர், மொடக்குறிச்சி, குளூர், ஆலூத்துப்பாளையம், பனங்காட்டுவலசு, கந்தாயிகுட்டை, புளியங்காட்டுவலசு, லிங்ககவுண்டன்வலசு, நரிக்காட்டுவலசு, குமராயிவலசு, எம்.வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது