ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூலை 10) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூலை 10) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (10-ம் தேதி) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம், மேட்டுக்கடை ஆகிய துணை மின் நிலை யங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சூரியம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தோடு, சுண்ணாம்புஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி.குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளை யம், தயிர்ப்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பா ளையம், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன்ந கர், ஊத்துக்காடு, பெரியபுலியூர், சேவக்கவுண்டனூர்.

மேட்டுக்கடை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மேல் திண்டல், கீழ் திண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம்,சுத்தானந்தன்நகர், லட்சுமி கார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்கு பள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதிநகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குப்புதூர், எஸ்.எஸ்.பி.நகர், தென்றல் நகர், முத்துமாணிக்கம்நகர், ராசாம்பாளையம், கருவில்பாறைவலசு, கருவில்பாறைகுளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது