அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை (அக்.,30) மின்நிறுத்தம் அறிவிப்பு

அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை (அக்.,30) மின்நிறுத்தம் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் அத்தாணி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மின்தடை செய்யப்படும் என்று, மின்வாரியம் அறிவித்துள்ளது.

அத்தாணி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அத்தாணி துணை மின் நிலையத்தில் நாளை (அக்டோபர் 30) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில், நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தாணி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அத்தாணி டவுண், நகலூர், பெரியபாளையம், கீழ்வாணி, இந்திரா நகர், மூங்கில்பட்டி, கைகாட்டி பிரிவு, சவண்டப்பூர், கரட்டூர், டி.ஆர். காலனி, முனியப்பன்பாளையம், தம்பங்கரடு, குண்டு மூப்பனூர், வீரனூர், போகநாயக்கன்பாளையம், கீழ்நாயக்கனூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், பெருமாள்கோவில் புதூர் மற்றும் அந்தியூர் நகர குடிநீர் விநியோகம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு