வரி செலுத்தாத 500க்கும் மேற்பட்டோருக்கு ஈரோடு மாநகராட்சி நோட்டீஸ்..!
ஈரோடு மாநகராட்சி அலுவலகம்.
Erode News, Erode Today News - ஈரோடு மாநகராட்சியில் 2023–2024ம் ஆண்டுக்கான வரி செலுத்தாத, 500க்கும் மேற்பட்டோருக்கு, மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து உதவி ஆணையர் அண்ணாதுரை ( வருவாய் பிரிவு) கூறியதாவது :-
2023 – 2024ம் ஆண்டுக்கான வரியில் ரூ.85 கோடிக்கு, ரூ.71 கோடி வசூலாகி உள்ளது. இன்னும், ரூ.14 கோடி வசூலாக வேண்டியுள்ளது. இதன் காரணமாக, வரி செலுத்தாத, 500க்கும் மேற்பட்டோருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்.
இதேபோன்று, 2024 – 2025ம் ஆண்டுக்கான வரி வசூல், ஜூன் 1 முதல் தொடங்கி இருக்கிறோம். இந்தாண்டில் ரூ.88 கோடி வசூலிக்க வேண்டும். தற்போது இதுவரை ரூ.15 கோடி வரை வசூலாகியுள்ளது. 2024 – 2025ம் ஆண்டுக்கான வரி வசூல், கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த ஜூன் 1ம் முதல் தொடங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu