அந்தியூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Suicide News | Erode Local News
X
புதுமேட்டூர் பகுதியில்,  துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வடமாநில பெண் தொழிலாளி குறித்து, அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர். 
Suicide News - அந்தியூர் அருகில் புதுமேட்டூர் பகுதியில், செங்கல் சூளையில் வேலை செய்த வடமாநில பெண் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Suicide News - மேற்குவங்கம் நடியா மாவட்டம், சோனக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஒபர்னாசிங் (வயது 36). இவரது முதல் கணவர் திலிப் சிங் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுடைய மூன்று மகள்கள் மேற்குவங்கத்தில் உள்ளனர். இதேபோல், ஜெந்துசிங் (வயது 26) என்பவரின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கும் மூன்று மகன்கள் உள்ளனர்.

கணவனை இழந்த ஒபர்னாசிங்கும், மனைவியை இழந்த ஜெந்துசிங்கும் கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுமேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் இருவரும் வேலை செய்தனர். நேற்று இரவு ஒபர்னாசிங் முதல் கணவரின் மகள்களுக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப பணம் கேட்டுள்ளனர். ஜெந்துசிங் இப்போது பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்த ஒபர்னாசிங் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கு பதிவு செய்த அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!