ஈரோடு வி.இ.டி கல்லூரியில் புகையிலை இல்லா விழிப்புணர்வு முகாம்

ஈரோடு வி.இ.டி கல்லூரியில் புகையிலை இல்லா விழிப்புணர்வு முகாம்
X

Erode news- ஈரோடு மாவட்ட புகையிலைக் கட்டுப்பாடு மைய மருத்துவர் கலைச்செல்வி மாணவர்களுக்கு புகையிலை பாதிப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.

Erode news- ஈரோடு வி.இ.டி கல்லூரியில் புகையிலை இல்லா விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு வி.இ.டி கல்லூரியில் புகையிலை இல்லா விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்றது.

ஈரோடு வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், ஈரோடு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் இயங்கி வரும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து புகையிலை இல்லா விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாக செயலாளர் ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக கல்லூரியின் பொறுப்பு முதல்வர்களான அருள்ராஜ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையுரை ஆற்றி முகாமினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட புகையிலைக் கட்டுப்பாடு மைய மருத்துவர் கலைச்செல்வி மற்றும் மாவட்ட புகையிலை சமூக சேவகர் சங்கீதா ஆகியோர் மாணவர்களுக்கு புகையிலை பாதிப்புகள் குறித்து சிறப்பு இலவச ஆலோசனைகளை வழங்கினர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். இம்முகாமில், வி.இ.டி கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் திட்ட அலுவலர் தினேஷ் ஒருங்கிணைத்தார்.

Tags

Next Story
ai solutions for small business