இரவு நேர ஊரடங்கு: ஈராேடு மாவட்டம் முழுவதும் காண்காணிப்பு பணியில் 800 போலீசார்
X
By - S.Gokulkrishnan, Reporter |6 Jan 2022 5:45 PM IST
இரவு நேர ஊரடங்கையொட்டி, ஈரோடு மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தமிழக அரசு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கையொட்டி, ஈரோடு மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu