ஈரோட்டில் போலி வெளிநாட்டு கரன்சியை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியா வாலிபர்
போலி அமெரிக்கா டாலர் நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியா வாலிபர் நாதன் இகேச்சுக்வு.
ஈரோட்டில் போலி வெளிநாட்டு கரன்சியை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியாவை சேர்ந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் ஈரோட்டில் அபி டூர்ஸ் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
இதன் மூலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வெளிநாட்டு கரன்சிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் பணம் கொடுப்பது, விமான டிக்கெட், ரயில் டிக்கெட், போன்றவை முன்பதிவு செய்து கொடுக்கப்படும் என இணையதளம் மூலமாக விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை செய்து வந்தார்.
இந்நிலையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு (வயது 36) என்பவர் இணையதளத்தில் செய்துள்ள விளம்பரத்தை பார்த்து மருத்துவமனை சிகிச்சைக்காக அவசரமாக 500 டாலர் அமெரிக்க மதிப்பு பணத்திற்கு பதிலாக இந்திய மதிப்புக்கு பணம் தேவை என அசோக்குமாரை அணுகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அசோக்குமார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலைக்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நாதன் இகேச்சுக்வு வரச் சொல்லி 500 அமெரிக்க டாலர் பணத்தைக் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக இந்திய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
அந்த அமெரிக்க டாலரை அசோக்குமார் வாங்கி சோதனை செய்த போது இது போலியான என தெரியவந்தது. இதனையடுத்து, அசோக்குமார் இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், நாதன் இகேச்சுக்விடம் இருந்து போலி அமெரிக்கா டாலர் நோட்டுக்களை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். தற்போது, அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியில் தாங்கி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu