காவிரி ஆற்றில் நெரிஞ்சிப்பேட்டை - பூலாம்பட்டி படகு போக்குவரத்து நிறுத்தம்
நெரிஞீசிப்பேட்டை-பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்து நிறுத்தம்.
காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி எட்டியதை அடுத்து, அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக ஒரு லட்சத்திற்கும் மேலாக கன அடி தண்ணீர் விதம் காவேரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி கரையோர பகுதிகளில் வருவாய்த் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டை படகு துறையிலிருந்து சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கு காவிரி ஆற்றில் இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து கோபி வருவாய் கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது.
தொடந்து தண்ணீரின் அளவு காவிரி ஆற்றில் படிப்படியாக குறையும்போது மீண்டும் படகு போக்குவரத்து தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கோபி வருவாய் கோட்டாட்சியர் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் பாதிக்கப்படும் இடங்களில் ஆய்வு நடத்தினார் மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் துறையின் இடம் கேட்டு அறிந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu