பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,853 கன அடியாக அதிகரிப்பு
Erode news- பவானிசாகர் அணை.
Erode news, Erode news today- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (11ம் தேதி) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,306 கன அடியிலிருந்து 3,853 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு உள்பட 3 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து நேற்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,306 கன அடியாக இருந்த நிலையில், இன்று (11ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,853 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வருவதால், அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது. நேற்று காலை 95.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 94.87 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 750 கன அடி, காலிங்கராயன் வாய்க்காலில் 100 கன அடி என மொத்தம் வினாடிக்கு 3,150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu