ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை கொண்ட அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் பாதுகாப்பையும் பேணவும், மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றினைந்த தேசத்தின் நல்லுணர்வினை ஏற்படுத்திடவும் மற்றும் நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய பங்களிப்பை வழங்கும் பொருட்டும், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நாளை (அக்டோபர் 31) சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 30) ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியான, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒறுமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழியினை, மாவட்ட வருவாய் அலுவலர் வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முஹம்மது குதுரத்துல்லா (பொது), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், அலுவலக மேலாளர் (பொது) பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu