ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் பொறுப்பேற்பு
Erode news- ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Erode news, Erode news today- ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்ற நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக வி.சிவகிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் பணியாற்றி வந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன், பின்னர் தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இணைய இயக்குநராக பணியாற்றி வந்த கூடுதல் ஆட்சியர் டாக்டர்.நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, இன்று (19ம் தேதி) ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையாளருக்கு மாநகராட்சி சுகாதார அலுவலர்கள்,பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம், ஏலம் விடப்படாத வணிக வளாகம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற முக்கிய திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு மாநகராட்சி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu