ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
Erode news- ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்.
Erode news- ஈரோட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (21ம் தேதி) நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (21ம் தேதி) நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (21ம் தேதி) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தி இருந்தார்.

இதன்படி, இன்று ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மண்டல செயலாளர் நவநீதன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தை தொகுதி செயலாளர் லோகநாதன் ஒருங்கிணைத்தார். மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் சத்யா முருகேசன், சீதாலட்சுமி, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர்கள் மணிகண்டன், அருண்குமார், மோதிலால் பிரசாந், முருகேசன், தினேஷ்குமார், மூர்த்தி, தாண்டமூர்த்தி, விஜய் மேத்யூ உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai powered agriculture