ஈரோடு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் வேட்புமனு தாக்கல்..!

ஈரோடு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் வேட்புமனு தாக்கல்..!
X

ஈரோடு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் மு.கார்மேகன் செவ்வாய்க்கிழமை (இன்று) தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் மு.கார்மேகன் செவ்வாய்க்கிழமை (இன்று) தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் சூழலில், தமிழகத்தை பொருத்தமட்டில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணிகள் மற்றும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் மு.கார்மேகன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வழக்கறிஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் அபிசேக், உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர், மகேஸ்வரி, மண்டல செயலாளர் நவநீதன் ஆகிய 4 பேர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!