சித்தோடு: வலிமை பட பாணியில் நகை பறிப்பு- போலீஸ் வலைவீச்சு

சித்தோடு: வலிமை பட பாணியில் நகை பறிப்பு- போலீஸ் வலைவீச்சு
X

கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் எடுக்கப்பட்ட படம்.

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மோகனசுந்தரம். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (30). ஜவுளிக்கடை விற்பனையாளர். சம்பவத்தன்று, மோகனசுந்தரமும், கிருஷ்ணவேணியும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கங்காபுரம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள், இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.

இதில் கணவன், மனைவி இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தார்கள். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கிருஷ்ணவேனியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து கிருஷ்ணவேனி சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேனியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்