பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இசை நிகழ்ச்சி
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி.
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. கோவில் பின் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி மற்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், மார்கழி இசை விழா சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டதையடுத்து, மாவட்டந்தோறும் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கும் வகையில் கலை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பவானியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோயில் உதவி ஆணையர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். ஈரோடு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, குமாரபாளையம் மக்கள் நல மன்றத் தலைவர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மங்கள இசை, தேவார இசை, குரலிலை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆலங்குடி, கோவை, சேலம், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu