பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 6 பவுன் நகை கொள்ளை

பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 6 பவுன் நகை கொள்ளை
X

பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட வீடு.

பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை குத்திக்கொலை செய்து விட்டு, 6 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமிநகர் அருகே உள்ள கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி வளர்மதி. இவர்களின் 2 மகள்களும் திருமணம் செய்து வைத்த நிலையில், மனைவி வளர்மதியுடன் கணேசன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், கணேசன் இன்று காலை பவானி வரை சென்றுள்ளார். வீட்டில் வளர்மதி மட்டும் தனியாக இருந்துள்ளார். சிறிது நேரத்தில், வீட்டில் இருந்து அலறல் சத்தம் வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில், வளர்மதி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார்.

இதுகுறித்து, வீட்டின் அருகில் இருந்தவர்கள், போலீருசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வந்த டிஎஸ்பி , ஏடிஎஸ்பி மற்றும் போலீசார், வளர்மதியின் உடலில் இருந்த தடயங்களை, கைரே கை நிபுணர்கள் உதவியுடன் சேகரித்தனர். பின்னர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு உள்ள பகுதிகளில் பட்டப்பகலில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!