/* */

சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (பிப்.28) முல்லைப்பூ கிலோ ரூ.760-க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று முல்லைப்பூ கிலோ ரூ.760-க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (பிப்.28) முல்லைப்பூ கிலோ ரூ.760-க்கு விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்று (பிப்.28) செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.700 ,

முல்லைப்பூ - ரூ.760 ,

காக்கா - ரூ.300 ,

செண்டுமல்லி - ரூ.50 ,

கோழிக்கொண்டை - ரூ.125 ,

ஜாதிமுல்லை - ரூ.500 ,

கனகாம்பரம் - ரூ.600 ,

சம்பங்கி - ரூ.50 ,

அரளி - ரூ.100 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.120-க்கும் விற்பனையானது.

Updated On: 28 Feb 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்