மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி
X

பைல் படம்.

திண்டல் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் பிரபல தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சிவகாசியை சேர்ந்த அபினேஷ் (வயது 19) இறுதி ஆண்டு சிவில் பிரிவிலும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த தருண்ராஜ் (வயது 17) ஆட்டோமொபைல் பிரிவிலும் இருவரும் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று ஈரோடு பகுதிக்கு வந்த பின்னர் மீண்டும் பெருந்துறை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை அபினேஷ் ஓட்டி வந்துள்ளார். பின்னால், தருண்ராஜ் அமர்ந்து இருந்தார்.


அப்போது, மோட்டார் சைக்கிள் திண்டல் பகுதிக்கு வரும் போது கட்டுப்பாட்டை இழந்து, ரிங்ரோடு சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதிய வேகத்தில், இருவரின் தலையிலும் ஏற்பட்ட பயங்கர காயத்தால் அபினேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பின்னர், ஈரோடு அரசு மருத்துவமனை செல்லும் வழியில் தருண்ராஜ் உயிரிழந்தார். விபத்தில் பலியான 2 கல்லூரி மாணவர்கள் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!