குருவரெட்டியூரில் காசநோய், மழைக் கால நோய் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

குருவரெட்டியூரில் காசநோய், மழைக் கால நோய் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
X

Erode news- குருவரெட்டியூரில் நடந்த காசநோய் எதிர்ப்பு, மழைக்கால பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரில் காசநோய் மற்றும் மழைக் கால நோய் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Erode news, Erode news today- அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரில் காசநோய் மற்றும் மழைக் கால நோய் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோய் எதிர்ப்பு மற்றும் மழைக்கால நோய்கள் பாதுகாப்பு குறித்து சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் நுண்கதிர் பரிசோதனை குழுவின் பயன்கள் குறித்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு வழி முறைகள், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் அன்புமணி, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜய சேகர், நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை குழுவினர், மருத்துவ அலுவலர், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 95 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை குழுவின் மூலமாக மார்பக நுண்கதிர் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil