கபிலர்மலை அருகே கார் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சாவு

கபிலர்மலை அருகே கார் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சாவு
X

பைல் படம்.

கார் மோதிய விபத்தில் பெண் ஒருர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கமித்திரன் வயது 31.இவரது மனைவி லதா வயது 27. இவர்கள், தங்களது ஒன்றரை வயது குழந்தையுடன் பரமத்திவேலூர் அடுத்த பாலப்பட்டியில் உள்ள லதாவின் தாயார் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் கடந்த 20ம் தேதி சென்றனர்.

அப்போது கபிலர்மலை அடுத்த செம்மடை அருகே எதிரே வந்த கார் மோதியது. சங்கமித்திரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் படுகாயமடைந்த லதா, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare