/* */

சித்தா டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை

தனியார் சித்தா மருத்துவமனை டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

HIGHLIGHTS

சித்தா டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் அடுத்த தாசன்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள் நாகலிங்கம் இவரது மனைவி கமல சங்கரி. இவர்களுக்கு காயத்ரிதேவி, காவியா என இரண்டு மகள்கள் உள்ளனர். அருள் நாகலிங்கம் ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். மருத்துவமனைக்கு பின்புறமுள்ள தாசன் காட்டுப்புத்தூரில் கடந்த 11 மாதத்திற்கு முன்பு புதிதாக வீடு வாங்கி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் சித்தா டாக்டர் அருள் நாகலிங்கம் நேற்று மயிலாடுதுறைக்கு கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை தனது சித்த மருத்துவமனைக்கு கமல சங்கரி மற்றும் இரண்டு மகள்கள் சென்று விட்டு மதியம் உணவுக்கு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 650 ரூபாய் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் மற்றும் ஈரோடு டவுன் டிஎஸ்பி., ஆனந்தகுமார், பெருந்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளை குறித்து கைரேகை பதிவு செய்தனர். மேலும் இக்கொள்ளை சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்