கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சர்வாலய தீப பூஜை

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத  சர்வாலய தீப பூஜை
X
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சர்வாலய தீப பூஜை கோலாகலமாக நடந்தது.

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சர்வாலய தீப பூஜை நடந்தது. கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயிலில் இன்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனைகள் நடந்தன. இதனையடுத்து கோயிலில் சர்வாலய தீபம் ஏற்பட்டது. பின்னர் மகுடேஸ்வரர் மற்றும் வடிவுடையநாயகி, வீரநாராயணப்பெருமாள், பூதேவி, சீதேவி ஆகிய உற்சவமூர்த்திகள் திருச்சுற்று செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி கோயில் வளாகத்துக்குள்ளேயே நடந்தது.பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை அடுத்து பௌர்ணமி தினமான இன்று காவிரியில் காவிரிதாய்க்கு படி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்சிகளுக்கு ராமலிங்க சிவாச்சாரியர் தலைமையில் வகித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!