கிணற்றில் மூழ்கி காண்டிராக்டர் பலி

கிணற்றில் மூழ்கி காண்டிராக்டர் பலி
X
பைல் படம்.
மொடக்குறிச்சி அருகே தோட்டத்து கிணற்றில் மூழ்கி காண்டிராக்டர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர். இவர் கோபியில் சப் ரிஜிஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு சொந்தமான தோட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம் பாளையம் பகுதியில் உள்ளது. சம்பவத்தன்று உதயசங்கர், ராதிகா மற்றும் காசிபாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த ராதிகாவின் அண்ணன் சரவண ராஜு (வயது 55) காண்டிராக்டர் ஆகிய 3 பேரும் ஆனந்தம் பாளையத்தில் உள்ள தோட்டத்திற்கு வந்தனர். அப்போது உதயசங்கர் மற்றும் சரவணன் ராஜு ஆகியோர் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது தோட்டத்தில் இருந்த கிணற்றில் சரவணராஜு குளிப்பதற்காக இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி விட்டதாக தெரிகிறது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரவன ராஜு உடலை மீட்டனர். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!