கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கவிஞர் சினேகன் சாமி தரிசனம்

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கவிஞர் சினேகன்   சாமி தரிசனம்
X

கொடுமுடி மகுடேஸ்வரர்கோயிலில் சாமி தரிசனம் செய்த கவிஞர் சினேகன். 

கொடுமுடி மகுடேஸ்வரர்கோயிலில் மக்கள் நீதிமய்ய மாநில இளைஞரணி தலைவரும் , பாடலாசிரியருமான சினேகன் சாமி தரிசனம் செய்தார்.

நேற்று பகலில் பாடாலசிரியரான கவிஞர் சினேகன் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தனது மனைவி கனிகாவுடன் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை அறிந்த சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முனைந்தனர். இந்நிலையில் கோயிலுக்குள் சென்ற அவருக்கு சிவாச்சாரியர்கள் பூஜைகள் செய்து பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்த சினேகன் கோயில் எதிரில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்தி விட்டு புறப்பட்டு சென்றார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் கோயிலிலும் காவிரி படித்துறையிலும் அதிகமாக காணப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!