மொடக்குறிச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

மொடக்குறிச்சியில்   சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்  திறப்பு
X
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து முழு ஊரடங்கால் தினசரி வருவாயை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட தொகுப்புக்கள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எம்எல்ஏ சரஸ்வதி கூறுகையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படும் வகையில் கரூவூல அலுவலகம் அமைக்கப்படும். நீதிமன்றம் அமைக்கப்படும். தரம் உயர்த்தப்பட்ட மாநகர துணைக் கண்காணிப்பாளர் காவல்நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களை தாலூக்கா மருத்துவமனைகளாக அனைத்து வசதிகளுடன் க தரம் உயர்த்தப்படும். சப் ஜெயில் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!