காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு பணி: மொடக்குறிச்சி எம்.எல்.ஏ ஆய்வு
ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள காலிங்கராயன் பாளையத்தில் இருந்து ஆவுடையார் வரை காலிங்கராயன் வாய்க்கல் செல்கிறது. இந்த காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை, நெல், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆங்காங்கே காலிங்கராயன் வாய்க்காலில் கரைகள், பாலங்கள் மற்றும் மதகுகள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறையின் சார்பில் நீட்டித்தல், புரனமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட நிதியின் கீழ் ரூ.76.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் முதல் ஆவுடையார் பாறை வரை 40 மைல் தூரம் உள்ள வாய்க்காலில் 21 பாலங்கள், 513 மதகுகள், 25 குமுழி பாலம், 2485 மீட்டர் நீளம் தடுப்பு சுவர், 1210 மீட்டர் கிளை வாய்க்கால் உள்ளிட்ட சீரமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
இந்நிலையில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி சின்னியம்பாளையம், கருமாண்டம்பாளையம், ஆவுடையார் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ.சிவசுப்பிரமணி, பாஜக. மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu