மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
X

மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளை

மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளை

மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார், மணலிகந்தசாமி தெரு, கிரீன் பார்க் பகுதியில் வசித்து வருபவர் கணபதி. இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜோதி, மகன் அருண் ஆதித்யா ஆகியோர் உள்ளனர். மகன் அருண் ஆதித்யா பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை கணபதி வெளியே சென்றுவிட்டார். மகன் அருண் ஆதித்யா வேலைக்கு சென்றுள்ளார். மனைவி ஜோதி காங்கயத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து நேற்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த மகன் அருண் ஆதித்யா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த பீரோவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மொடக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மர்ம நபர்கள் பீரோவிலிருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளைடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை சேரித்தனர்.

மேலும் இதுகுறித்து கணபதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மொடக்குறிச்சி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!