சோலார் பகுதியில் 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல்

சோலார் பகுதியில் 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல்
X

பைல் படம்.

ஈரோடு சோலார் பகுதியில் 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

மழை காலம் தொடங்கி உள்ளதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் வீடு, வீடாக சென்று பணியாளர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு உற்பத்தியாகாத வண்ணம் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வீட்டை தூய்மையாக வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் மொடக்குறிச்சி தாலுகா லக்காபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட சோலார் அடுத்த செண்பகமலை நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் ஒரே தெருவில் வசிக்கும் 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து லக்காபுரம் பஞ்சாயத்து சார்பில் பணியாளர்கள் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு வீடு, வீடாக சென்று மருந்து தெளித்து வருகின்றனர். மேலும் வேறு யாருக்கும் காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture