கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் வழக்கமான கட்டளை பூஜைகள் துவக்கம்

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் வழக்கமான கட்டளை பூஜைகள் துவக்கம்
X

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கட்டளை பூஜை.

கொடுமுடி மகுடேஸ்வரர்கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடந்தன.

கொடுமுடி மகுடேஸ்வரர்கோயிலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று வழக்கமான கட்டளை பூஜைகள் துவங்கின.கொரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில்களில் வழக்கமான வழிபாட்டு முறைகள் தடைபட்டிருந்த நிலையில் தற்போது நிலைமை மெல்ல மெல்ல சீரடைந்து வருவதை முன்னிட்டு வழிபாட்டு தலங்களின் மீதான அரசின் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனை அடுத்து இன்று கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. அதேபோல நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுப்பிரமணியருக்கு அபிஸேக ஆராதனைகளும் திரிசதை அர்ச்சனைகளும் மேற்கொள்ளப்பட்டன. கட்டளைதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சிறப்பு வழிபாடுகள் வழக்கம்போல இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்தன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!