பாஜகவில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவி

பாஜகவில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவி
X

வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவி திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வள்ளிபுரம் ஊராட்சியின் திமுக கிளை செயலாளர் மூர்த்தி மற்றும் அவரது மனைவியான வள்ளிபுரம் ஊராட்சி மன்றத் தலைவி கவிதா மூர்த்தி ஆகியோர் திமுகவில் இருந்து விலகி, இன்று மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர்.

அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்ற எம்எல்ஏ சரஸ்வதி, பாஜகவின் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் புரிந்து கொண்டு இணைந்ததற்காக இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். .

இந்த நிகழ்ச்சியில் பாஜக கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் முருகானந்தம், கிழக்கு ஒன்றிய தலைவர் கிளாம்பாடி சேகர், முன்னாள் வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!