மொடக்குறிச்சி அருகே உயர் நீதிமன்ற உத்தரவுப் படி ஆக்கிரமிப்பு அகற்றம்…

மொடக்குறிச்சி அருகே உயர் நீதிமன்ற உத்தரவுப் படி ஆக்கிரமிப்பு அகற்றம்…
X

ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றபட்டது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்பு இடம் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி கிராமம் கீரமடையில் சர்வே எண் 80 7/15,807/2 இல் அந்த பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் அரசு இடத்தில் கழிப்பறை மற்றும் தங்கும் அறை கட்டியும், சிமென்ட் ரோட்டில் செப்ட்டிங் டேங்க் கட்டியும் அதன் மேல்புறத்தில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் செட் போட்டு வாகனங்கள் செல்ல தடை ஏற்படுத்தியும் இருந்தார்.

மற்றொரு இடத்தில் சமையல் செய்யும் அறை கட்டியும் அனுபவித்து வந்தார். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவில் பல முறை தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பாலமுருகன் கடந்த 25.11.2022 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை நீதிபதிகள் ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் கடந்த 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

பாலமுருகன் தரப்பில் ஆஜரான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞரான கார்த்திகேயன், ஆக்கிரமிப்பு குறித்த வாதத்தை நீதிபதிகள் முன்னிலையில் முன்வைத்தார். அவரது தரப்பு நியாயத்தை ஏற்று நீதியரசர்கள் 15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் விபரத்தை உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி தீர்ப்பு வழங்கினர்.

இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சரவணன் முன்னிலையில், ஈஞ்சம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மாயவன், ஊராட்சி மன்ற செயலாளர் சரவணன் ஆகியோர் போலீஸார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினர்.

மேலும், அருகில் இருந்த குளியலறை, கழிவறை ஆகியவற்றையும் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டது. பாதுகாப்பு பணியில் மலையம்பாளையம் போலீஸார் ஈடுபட்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil