ஈரோடு குடும்ப தகராறில் தாய் தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு  குடும்ப தகராறில்  தாய் தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை
X
ஈரோடு அருகே குடும்ப தகராறு காரணமாக விஷ மாத்திரையை சாப்பிட்டு தாய், மகன், மகள் ஆகிய மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொளாநல்லி அருகே உள்ள வீரப்பண்ணகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு சங்கர் விவசாயி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு நிகின் சங்கர் என்ற மகனும், சுதர்சனா என்ற மகளும் உள்ளனர். பிரபு சங்கருக்கும் மனைவி சசிகலாவுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்த தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த சசிகலா நள்ளிரவு சுமார் 2 மணியளவில் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி தனது குழந்தைகளான நிகின்சங்கர்,சுதர்சன் ஆகியோருக்கும் விஷ மாத்திரையை கொடுத்துள்ளார். இதையடுத்து மாத்திரையை சாப்பிட்ட மூன்று பேரும் சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்துள்ளனர். இவர்களை கண்ட கணவர் பிரபு சங்கர் மனைவி குழந்தைகள் என மூவரையும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்தார். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து மூவரின் சடலங்களை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறில் தாய், மகன், மகள் ஆகிய மூவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!